#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
மக்கள் பிரச்சனையை பேச அனுமதி மறுப்பு? திமுக அரசு மீது எடப்பாடி குற்றசாட்டு.!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த கேள்விநேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் & அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,"தமிழ்நாட்டில் ஒரேநாளில் 4 கொலைகள் நடைபெற்றுள்ளது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதுதான் திமுக அரசு ஆட்சி நடத்தும் நிலையா?" என கேள்வி எழுப்பினார்.
பிரச்சனையை திசைதிருப்புகிறது
இந்த விசயத்துக்கு பதில் அளித்த முதல்வர் முக ஸ்டாலின், தனது உரைகளை முன்வைத்து இருந்தார். மேலும், சாத்தான்குளம், தூத்துக்குடி துப்பாக்கிசூடு விஷயத்தை மேற்கோளிட்டு பேசினார். இதனால் அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், "நடைபெற்று முடிந்த நிகழ்வுகளை பேசி பிரச்னையை திசை திருப்பவே திமுக அரசு முயல்கிறது.
இதையும் படிங்க: #Breaking: தூத்துக்குடி, சாத்தான்குளம் நினைவிருக்கா? - கேள்வி கேட்டதும் வெளியே வந்த அதிமுக..!
வீதியில் நடமாட பயம்
திமுக அரசு செயலற்று இருக்கிறது. திமுக ஆட்சி மோசமாக இருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர். ஓய்வுபெற்ற காவலர் ஜாகிர் உசேன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியும் நடவடிக்கை இல்லை. முதல்வர் மக்களின் உயிருக்கு உத்திரவாதம் கொடுப்பதில்லை. காவல்துறை, அரசை நம்பி மக்கள் எப்படி வீதியில் நடமாடுவார்கள்?. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது.
ஒரேநாளில் 4 கொலைகள்
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு சிறப்பாக செயல்படுகிறது என முதல்வர் கூறிய அன்றைய நாளே 4 கொலைகள் நடைபெற்றுள்ளன. முதலமைச்சருக்கு மனசாட்சி என்பது இல்லை. எங்களை சட்டப்பேரவையில் பேச அனுமதிப்பதில்லை. மக்களின் பிரச்சனைகளை பேச முற்பட்டால், எங்களை பேச அனுமதிப்பது இல்லை. திமுக அரசை கண்டு பயப்பட அதிமுக இல்லை. நாங்கள் மக்களுக்காக குரல் கொடுக்கிறோம். மக்களுக்கு நாங்கள் கொடுக்கும் குரல் கேட்கக்கூடாது என எங்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை. அதனால் வெளிநடப்பு செய்கிறோம்" என கூறினார்.
இதையும் படிங்க: லோகோ பைலட் தேர்வில் தமிழர்களை வஞ்சிக்கும் செயல்? வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு.. இபிஎஸ் குற்றசாட்டு.!