உதயமானது "டெக் சூப்பர் ஸ்டார்"  யூடியூப் சேனல் - புது ஆபிஸ் ஓபன் பண்ணியாச்சே.. இனி எல்லாம் மாஸ் தான்.!



Tech Super Star YouTube Channel by Ex Anchor TechBoss Sudharsan 


சமூக வலைத்தளங்களின் அறிமுகத்திற்கு பின்னர், பலரும் பிரபலமாகிவிட்டனர். இவர்களை பிரபலமாக்க, இவர்களின் தனித்தன்மையை அடையாளப்படுத்த யூடியூப், பேஸ்புக் சேனல்கள் பெரிதும் உதவி செய்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கான தனித்திறமையை வெளிப்படுத்தி, அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றனர். 

அப்படியாக, தமிழகத்தில் ஸ்மார்ட்போன், டிவி உட்பட ஸ்மார்ட் பொருட்கள் குறித்த பல்வேறு தகவலை டெக் பாஸ் என்ற சேனல் வழியாக தொகுத்து வழங்கி வந்தவர் சுதர்சன். டெக் பாஸ் சேனல் தனியார் தயாரிப்பு நிறுவனத்தின் கைகளில் இருந்தது. 

டெக் பாஸ் சேனலில் இருந்து வெளியேறியது ஏன்? சுதர்சன் விளக்கம்

இதையும் படிங்க: மோட்டோரோலா போன்கள் விற்பனை, பயன்பாடு, இறக்குமதிக்கு திடீர் தடை; ஈரான் அரசு உத்தரவு.!

நிறுவனத்தின் தொடக்கத்தில் சுதர்சனின் முழு கட்டுப்பாட்டில் இருந்த சேனல் கட்டுப்பாடுகள், மெல்லமெல்ல உரிமையாளர்கள் பக்கம் நகர்ந்து, இறுதியில் ப்ரோமோஷன் சார்ந்த விஷயங்கள் அதிகம் திணிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் தன்மீதான நம்பிக்கையை இழப்பார்கள் என சுதர்சன் அறிவுறுத்தியுள்ளார். 

இந்த விஷயத்தை நிறுவனத்தின் மேலிடம் கண்டுகொள்ளாத நிலையில், சுதர்சன் டெக் பாஸ் சேனலில் இருந்து விலகி, டெக் சூப்பர்ஸ்டார் (TechSuperstar) என்ற புதிய யூடியூப் சேனலை தொடங்கி இருந்தார். இதற்கான அறிவிப்பும் வெளியான நிலையில், இன்று பூஜைகள் போடப்பட்டுள்ளது. 

புதிய அலுவலகம் திறப்பு


டெக் பாஸ் சேனல் தனிப்பட்ட பொருளை விளம்பரப்படுத்த அதிகம் முயற்சிப்பதாக குற்றசாட்டை முன்வைத்த சுதர்சன், அந்நிறுவனம் தனக்கு சம்பளமாக மட்டுமே மொத்தமாக ரூ.60 இலட்சம் வரையில் தர வேண்டும் எனவும் கூறி இருக்கிறார். 

டெக் பாஸ் சேனலை வாங்கலாம் என பேச்சுவார்த்தையின்போது டிமாண்ட் வைத்த உரிமையாளர்கள், அதற்காக ரூ.15 கோடி ஆகும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த சுதர்சன், டெக் பாஸ் சேனலின் தற்போதைய செய்லபாடுகளை கண்டித்து, கட்டாயம் உங்களை வீழ்த்துவதே எங்களின் இலக்கு என, தனது அணியுடன் டெக் சூப்பர்ஸ்டார் பக்கத்தின் வாயிலாக புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

தனிமனிதனின் அர்ப்பணிப்பு உழைப்பும், கற்றல் அனுபவமும் என்றும் வீண்போகாது..

இதையும் படிங்க: உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனை 2% அதிகரிப்பு.. அடித்து தூக்கிய ஐபோன் 16 விற்பனை.!