மோட்டோரோலா போன்கள் விற்பனை, பயன்பாடு, இறக்குமதிக்கு திடீர் தடை; ஈரான் அரசு உத்தரவு.!



Motorola Phones Banned by Iran 

நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி மோட்டோரோலா போன்களுக்கு தடை விதித்து ஈரான் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனியம் இடையே ஆண்டுகளை கடந்து நடைபெற்று வரும் போர், மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் அபாயம் நிலவி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இதனால் தொடர்ந்து பதற்ற சூழல் நிலவி வருகிறது. போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து & அதன் நட்பு நாடுகள் களத்திற்கு நேரடியாக வராமல் துணை நிற்கின்றன. 

மத்திய கிழக்கு பதற்றம்

பாலஸ்தீனியத்தின் ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக மத்திய கிழக்கில் உள்ள ஈரான், ஏமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை ஆகிய நாடுகள் இருக்கின்றன. ஹமாஸ் அமைப்பும், அதன் தலைவர்களும், லெபனானின் ஹிசபுல்லா அமைப்பினரும் தேடித்தேடி வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இதனால் லெபனான், ஈரான் ஆகிய நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. 

இதையும் படிங்க: உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனை 2% அதிகரிப்பு.. அடித்து தூக்கிய ஐபோன் 16 விற்பனை.! 

Technology

பேஜர், வாக்கி-டாக்கி தாக்குதல்

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் சார்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனிடையே, சமீபத்தில் லெபனானில் பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். மேலும், 30 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பேஜர்களின் அலைவரிசையை வைத்து இஸ்ரேல் தொழில்நுட்ப ரீதியாக நடத்திய தாக்குதலை, அந்நாடும் ஒப்புக்கொண்டது. 

மோட்டோரோலாவுக்கு தடை

இந்நிலையில், ஈரானிலும் அதுபோன்ற தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், முன்னதாக பேஜர், வாக்கி-டாக்கி போன்றவற்றை விமான பயணத்தில் எடுத்துச் செல்ல தடை விதித்து ஈரானிய அரசு உத்தரவிட்டது. தற்போது மோட்டோரோலா ரக ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு, விற்பனை, இறக்குமதி ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை பேஜர்களை போல தொழில்நுட்ப ரீதியாக கட்டுப்படுத்தப்பட்டு வெடிக்கலாம் என்பதால், தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனமான மோட்டோரோலா இதனால் வணிக ரீதியான இழப்பை சந்தித்துள்ளது.