மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
YouTube-ல் இதை செய்ய இனி கட்டணம் கட்டாயம் - அதிரடியாக அறிவித்த யூடியூப்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.!
இனிவரும் நாட்களில் 4K தரத்தில் வீடியோ பார்க்க பிரீமியம் மெம்பராக இருக்க வேண்டும் என யூடியூப் அறிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் அனைத்து வகையான வீடியோக்களையும் பார்க்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட யூடியூப், தனது வாடிக்கையாளர்களுக்கு சமீபத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இத்தளத்தில் பதிவு செய்யப்படும் விளம்பரங்கள் மூலமாக அது தனது வருவாயை ஈட்டுகிறது.
கட்டணம் செலுத்தி விளம்பரம் இல்லாத வீடியோக்களை கண்டுகளிக்கும் வகையில் ஏற்கனவே நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இனி யூட்யூபில் 4K தரத்தில் வீடியோ பார்க்க வேண்டும் என்றால், வாடிக்கையாளர்கள் பிரிமியம் மெம்பராக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டணமாக மாதம் ரூ.129, 3 மாதங்களுக்கு மேல் ரூ.399, ஒரு வருடத்திற்கு மேல் ரூ.1,290 என்ற அடிப்படையில் செலுத்தப்பட வேண்டும். இந்த பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு YouTube Play Back, Premium Music போன்ற வசதிகளை பெற்றுக் கொள்ளலாம். சாதாரணமாக யூடியூப் செய்யும் வாடிக்கையாளர்கள் வழக்கம்போல தங்களின் செயலியை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.