மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னாள் காதலன் 4 பேருடன் மாற்றுத்திறனாளி பெண்ணை, காருக்குள்ளே வைத்து செய்த கொடூரம்!.
மாற்றுத்திறனாளியான இளம்பெண்ணை கொடூரமாக துன்புறுத்தி, உயரமான பாலத்திலிருந்து நதியில் தூக்கி போட்டு கொலை செய்ய முயற்சி செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த கைலா கேந்திரிகன் என்ற 19 வயது இளம்பெண் பிறக்கும்போதே இடது கை இல்லாமல் பிறந்துள்ளார். இவர் சமீபத்தில் இரவு நேரத்தில் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது வேகமாக அங்கு வந்த காரில் உள்ள இரண்டு பெண்கள் உட்பட 4 பேர், அவரை மிரட்டி கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர் அந்த பெண்ணை அடித்து, கொடுமை படுத்தி மேலும் 6 மணி நேரமாக கருக்குள்ளே வைத்து சித்ரவதை படுத்தி உயரமான பாலத்திலிருந்து கீழே உள்ள நதியில் தூக்கி எறிந்துள்ளனர்.
பின்னர் ஒரு கையை மட்டுமே வைத்துக்கொண்டு நீந்தி கரையை சேர்ந்ததும், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் கைலா. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கைலாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விசாரணையில் கைலாவின் முன்னாள் காதலரே இவ்வாறு செய்தது என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.