மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5 வயதில் 6 உலக சாதனை படைத்த சிறுவன்!. பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
ரஷ்ய நாட்டில் பிரைமரி பள்ளியில் பயின்று வரும் ரகிம் குரேயெவ் என்ற 5 வயது சிறுவன், 3202 தண்டால் எடுத்து 6 உலக சாதனைகளை முறியடித்துள்ளான்.
இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த செசென் குடியரசு தலைவர் ரம்சன் கட்ரோவ் கூறுகையில், சிறுவன் 40 நிமிடங்கள் 57 வினாடிகளில் 1000 தண்டால் எடுத்து முதல் சாதனை படைத்தார்.
1 மணி 30 நிமிடங்கள் 47 விநாடிகளில் 2000 ஆயிரம் தண்டால் எடுத்து இரண்டாவது சாதனை படைத்தார். ஒரு மணி நேரத்தில் 1419 தண்டால் எடுத்தது மூன்றாவது சாதனை படைத்தார்.
அதனை தொடர்ந்து நான்காவதாக 2 மணி நேரத்தில் 2559 முறை தண்டால் எடுத்தார். ஐந்தாவதாக 2 மணி 22 நிமிடங்கள் 09 விநாடிகளில் 3000 தண்டால் எடுத்து சாதனை படைத்துள்ளார் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, 2 மணி நேரம் 25 நிமிடங்களில் இடைவிடாமல் 4,105 தண்டால் எடுத்து சிறுவன் சாதனை படைத்தான். ஆனால் அப்பொழுது வீடியோவில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக அது கணக்கிடபடவில்லை.
இதனை தொடர்ந்து வெற்றியடைந்த சிறுவனுக்கு 28,000 டாலர் (ரூபாயில் 20 லட்சம்) மதிப்புள்ள பென்ஸ் கார் அளிக்கப்பட்டது. ரஷ்யாவை சேர்ந்த 5 வயது சிறுவன் 3,202 தண்டால் எடுத்து 6 உலக சாதனைகளை முறியடித்த சிறுவன் அனைவர்களிடமும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறான்.