மின்னல் தாக்கியதில் காற்றாலையில் பற்றி எரிந்த தீ!,, வைரலாகும் வீடியோ..!



A lightning strike caused a fire in the windmill

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் குரோவெல் நகர் அருகே இயங்கி வரும் பெரிய காற்றாலை ஒன்றின் மீது திடீரென மின்னல் தாக்கியதில், அது தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. காற்றாலையின் இறக்கையின் மீது தீப்பிடித்தபோதும், தொடர்ந்து சுழன்று கருமையான புகை பரவியது.

இதனை அந்த காற்றாலையின் அருகேயுள்ள நெடுஞ்சாலை வழியே வாகனத்தில் சென்றவர்கள் தங்களது செல்ஃபோனில் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 32 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.

தீப்பிடித்த பின்பும், நிற்காமல் சுழன்றதில், ஓர் இறக்கையில் இருந்து மற்ற இறக்கைகளுக்கும் தீ பரவியுள்ளது. இதன் பின்னர் காற்றாலையின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. குரோவெல் தீயணைப்பு துறையினருக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து தீயணைப்பு துறயினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

தீயணைப்பு வீரர்களில் ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளதாக தெரிகிறது. காற்றாலைகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியை மேற்கொள்வதற்கு போதிய வசதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.