மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லாரி மோதி அப்பளம் போல நொறுங்கிய பேருந்து.. 19 பேர் ஸ்பாட் அவுட்..! அச்சத்தில் பொதுமக்கள்..!!
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் பகுதியில் பயணிகளை ஏற்றுக்கொண்டு பேருந்து ஒன்று பயணம் செய்துள்ளது. அப்போது லாரி எதிர்திசையில் பயணம் செய்த நிலையில், ஓட்டுனரின் கவனக்குறைவு காரணமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கிய நிலையில், பயணம் செய்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலரும் மீட்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஆண்டுதோறும் மத்திய ஆப்பிரிக்காவில் சாலை விபத்தில் சிக்கி சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் இறப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.