உங்கள சும்மா விடமாட்டோம்! மீண்டும் அமெரிக்க தளம் மீது தாக்குதல்! உச்சகட்ட பதற்றம்!



again-attack-on-america


ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் ராணுவம் மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் மீண்டும் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது கடந்த 8-ந் தேதி ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. தங்கள் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதற்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 80 அமெரிக்க படைவீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் அமெரிக்கா இதனை உறுதி செய்யவில்லை.

attack

இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சமாதான பேச்சுக்கு ஈரான் முன்வந்தது. இதனால் இரு நாடுகளுக்குமிடையே போர் பதட்டம் குறைந்து வந்த நிலையில் திடீரென தற்போது மீண்டும் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் நாட்டு ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.

தலைநகர் பாக்தாத்தின் வடக்கே உள்ள அல் பலாத் விமான படைத் தளத்தின் மீது 8 கத்யுஷா வகை ராக்கெட்டுக்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில், ஈராக்கில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்கியிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கான பழிக்கு பழியாகவே இந்த தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.