மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓட்காவை கண்மூடித்தனமாக குடித்து கோமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர்.. குடிமகன்களே உஷார்.!
நண்பர்களுடன் பந்தயம் கட்டி அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்திய கல்லூரி மாணவர் கோமா நிலைக்கு சென்ற சோகம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள கொலம்பியா, மிசௌரி நகரில் உள்ள மிசௌரி பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர் டேனியல் சந்துள்ளி (Daniel Santulli) 19 வயது. இவர் கடந்த அக். 30 ஆம் தேதி நண்பர்களுடன் காரில் ஊரை சுற்ற வெளியே சென்றுள்ளார்.
அப்போது, அவருடன் இருந்த நண்பர்கள் பந்தயமாக ஓட்கா ரக மதுபானத்தை குடிக்க வற்புறுத்தியுள்ளார். பந்தய ஆர்வத்தில் டேனியலும் அளவுக்கு அதிகமான மதுபானத்தை குடித்து மயங்கியுள்ளார்.
இதனால் அவருடன் வந்த நண்பர்கள் டேனியல் மதுவால் மயக்க நிலையில் இருக்கிறார், நாளை எழுந்துவிடுவார் என்று எண்ணியுள்ளனர். ஆனால், மறுநாள் நேரம் கடந்தும் அவர் எழுந்துகொள்ளாத நிலையில், அவரை மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.
டேனியலுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், பரிசோதனை செய்துவிட்டு அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தியதால் லேசான மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போதுதான் உள்ளூர் ஊடத்துறையினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.