மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உக்ரைன் விமானத்தை தாக்கி வீழ்த்தியது யார்? அமெரிக்கா வெளியிட்ட வீடியோ!
அமெரிக்க- ஈரான் இடையிலான போர் பதற்றத்தின் மத்தியில், டெஹ்ரானில் இருந்து 176 பேருடன் கிளம்பிய உக்ரைன் விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஈரான் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்தநிலையில், ஈரான் ஏவுகனை தாக்குதலில் உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக அமெரிக்கா, கனடா அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். தொழில் நுட்ப கோளாறால் விமானம் விழுந்ததாக கூறப்பட்ட நிலையில் ஏவுகணையால் விழுந்ததாக புகார் எழுந்துள்ளது.
செயற்கைக்கோள்கள், ராடார் உள்ளிட்டவற்றின் சிக்னல் மூலம் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்ததில், இரண்டு ஏவுகணைகள் மூலம் உக்ரைன் விமானம் தாக்கப்பட்டது தெரியவந்ததாக அமெரிக்க தரப்பில் கூறப்பட்டது. இந்தநிலையில் உக்ரைன் விமானத்தை ஏவுகணை தாக்குவது போன்ற வீடியோவை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.