மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற நினைத்து, குடும்பத்துடன் உயிரிழந்த இந்தியர்கள்.!
கனடா நாட்டின் எல்லைப்பகுதி வழியாக அமெரிக்காவிற்கும் நுழைய முயற்சி செய்த இந்திய குடும்பத்தினர், கனடா எல்லையில் நிலவிய கடுமையான குளிரால் காருக்குள்ளேயே உயிரிழந்தவாறு பிணமாக மீட்கப்பட்டனர். விசாரணையின் போது, அவர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதும், அவர்கள் இந்தியர்கள் என்பதும் அம்பலமானது.
அவர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்தை சார்ந்தவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் பலதேவ்பாய் பாட்டீல் (வயது 39), அவரின் மனைவி வைஷாலிபென் ஜாகீஷ் குமார் பாட்டீல் (வயது 37), தம்பதிகளின் குழந்தைகள் விஷங்கி (வயது 11), தார்மிக் (வயது 3) என்பது தெரியவந்தது.
இவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய கனடா மற்றும் சிகாகோ நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கனடாவின் அமெரிக்க எல்லை பகுதிக்கு சென்று விசாரணை செய்தனர். இவர்களின் உடல் ஜனவரி 26 ஆம் தேதி உடற்கூறாய்வு செய்யப்பட்டது.