மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Video: விமான சாகச நிகழ்ச்சியில் சோகம்... 2ம் உலகப்போரில் தப்பித்து 2022-ல் நடுவானில் மோதி விபத்து..!
அமெரிக்காவில் இருக்கும் டெக்ஸாஸ் மாகாணம், டல்லாஸ் நகரில் விமானப்படை சார்பாக 2ம் உளங்கப்போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போயிங் பி17 ரக குண்டு வீசும் விமானம், சிறிய பெல் பி63 கிங்கோபரா விமானங்கள் விண்ணில் சாகசங்களை நிகழ்த்திக்கொண்டு இருந்தன.
அப்போது, இரண்டு விமானங்களும் எதிர்பாராத விதமாக நடுவானில் மோதிக்கொண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானங்கள் துண்டாக உடைந்து சிதறி தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த விமானிகளின் நிலை தெரியவில்லை.
NOW - B-17 bomber and a smaller plane collide at Dallas airshow.pic.twitter.com/BmJgnxBnrb
— Disclose.tv (@disclosetv) November 12, 2022
சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், விமானத்தில் இருந்த 6 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.