மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென ஜாம்பியான இளைஞர்...? முதியவரின் காதை கடித்த பரபரப்பு சம்பவம்...!
அமெரிக்காவின் ஒரீகான் மாகாணத்தில், க்ளே வாட் ரயில்வே ஸ்டேஷன் நடைபாதையில் ரயிலுக்காக 78 வயது முதியவரும், 25வது வயது இளைஞனும் காத்திருந்துள்ளனர்.
அப்பொழுது அந்த இளைஞர் திடீரென முதியவர் மீது பாய்ந்து அவரை கொலை வெறியுடன், முகத்தையும், காதையும் கடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர், கதறி அழுது கூச்சலிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ரயில்வே ஸ்டேஷன் வந்த காவல்துறையினர், முதியவர் இருக்கும் இடத்திற்கு, வந்தபோது அங்கு அவரின் மீது ஏறி அமர்ந்து அந்த இளைஞர் முதியவரை விடாமல் அப்பொழுதும் தாக்கியுள்ளார்.
இதை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சிக்குள்ளாகி, அந்த இளைஞரை பிடித்து இழுத்து காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அந்த முதியவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை கூறியதாவது, அந்த இளைஞரின் பெயர் கிரிமர் என்றும், அவர் ஏற்கனவே சிறையில் பல குற்றங்களை செய்து சிறை சென்றுள்ளார் என்றும், அந்த இளைஞர் போதை மருந்து உண்டு இருக்கலாம் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் முதியவரின் நிலைமை பற்றி கூறியதாவது, அவருக்கு முகத்தில் இளைஞர் கடித்ததில் படுகாயம் உண்டாகி மண்டை ஓடு தெரிவதாகவும், சிகிச்சை நடைபெற்று வருகிறது என்றும் கூறியிருக்கின்றனர்.
வளர்ந்து வந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில், துப்பாக்கி சூடு நடப்பதும், போதை மருந்து உட்கொண்டு பல இளைய தலைமுறை முறையினர் மனநலம் பாதிக்கப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
25 வயது இளைஞர் ஜாம்பி போல் மாறி முதியவரை கடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது.