மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உள்ளாடை உலகில் புதிய புரட்சி.. புதிய மாடல் உடையை அறிமுகம் செய்து, உலக பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த நடிகை.!
அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி மற்றும் திரைப்பட நடிகை கிம் கர்தாஷியன் (Kim Kardashian). இவர் கடந்த 2019 ஆம் வருடம் Skims Kin Solution Wear என்ற உள்ளாடை நிறுவனத்தை தொடங்கி, அதனை மார்கட்டிங் செய்ய உடைகளை தானே அணிந்து பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
பார்க்கவே உடல் தோற்றத்துடன் ஒத்து காணப்படும் நிறமுடைய Skims Kin உள்ளாடை, இறுக்கமாக உடலை பற்றும் வகையில் உருவாக்கப்பட்டது ஆகும். பெண்கள் அணியும் பிரா, கீழாடை போன்ற உடையை சேர்ந்து இணைத்தாற்போல, ஒரே உடையாக இறுக்கத்துடன் Skims Kin உடை காணப்படும். தனித்தனியேவும் விற்பனை செய்யப்படுகிறது.
2019 ஆம் வருடம் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையது ஆகும். வெறும் 2 வருடத்தில் ஆடைக்கென உள்ள ஃபிராண்டை நிலைநிறுத்தியுள்ளார். இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் மாடல் மற்றும் நடிகை கிம்மும் இடம்பெற்று இருக்கிறார்.
ஆனால், இதுபோன்ற இறுக்கமான உடைகள் அவர்களின் நாட்டு பருவசூழலுக்கு ஏற்றார் போல வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இறுக்கமான உள்ளாடைகளை அணிந்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு அவர்களை விட, நமது நாட்டவருக்கு கூடுதலாக இருக்கும் என்பது மறுக்க இயலாதது.