மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு தாயாக இருந்து இப்படிச் செய்யலாமா... தூங்கவிடாமல் அழுத குழந்தை ... தாய் செய்த கொடூர செயல் .!
அமெரிக்காவில் ஒன்பது மாத குழந்தைக்கு விஷம் கொடுத்து தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் அந்த தாயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் நசாவ் மாகாணத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு 9 மாத ஆண் குழந்தை இருந்தது. கடந்த மாதம் 26 ஆம் தேதி அந்த குழந்தை மர்மமான முறையில் இறந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரேத பரிசோதனையில் குழந்தையின் பாலில் ஃபெண்ட்டானில் எனப்படும் மயக்க மருந்து அதிக அளவில் கலந்திருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் குழந்தைக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அன்றைய தினம் மிகவும் சோர்வாக உணர்ந்ததாகவும் அப்போது குழந்தை அழுது கொண்டே இருந்ததால் கொக்கைன் என நினைத்து ஃபெண்ட்டானில் மருந்தை தவறுதலாக கலந்து கொடுத்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஃபெண்ட்டானில் என்பது அறுவை சிகிச்சைக்கு பிறகு வலி நிவாரணியாக கொடுக்கப்படும் மருந்தாகும். இந்த மருந்தை அதிக அளவில் பாலில் கலந்து குழந்தைக்கு கொடுத்திருக்கிறார். மேலும் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கொடுக்கவில்லை என்றும் தூங்க வைப்பதற்காக கொக்கைன் என நினைத்து ஃபெண்ட்டானில் மருந்தை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.