ரஷியா - உக்ரைன் போர் விவகாரம் : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரபரப்பு கண்டனம்.. ரஷியாவுக்கு எச்சரிக்கை.!



American President Warning to Russia

உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் ரஷ்யாவை எச்சரித்திருக்கிறார். 

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்து சென்று பல மாதங்களைக் கடந்தும், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனை முழுதுமாக கைப்பற்றும் முயற்சியில் முழு ஈடுபாடுடன் ரஷிய படைவீரர்கள் இறங்கியுள்ளார். 

இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், ரஷியா இதனை ஒருபோதும் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இரண்டாம் உலகப்போர்க்கு பின் நடைபெறும் இந்த போரின் போக்கு அனைத்தையும் மாற்றிவிடும்.

America

இந்த போரின் போது, போரின் போக்கை மாற்றும் வகையான ரசாயன ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் போன்றவை பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் கடும் விளைவுகள் உருவாகும்" என்று எச்சரித்துள்ளார்.