மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போலீசாருக்கும் ஒரு கும்பலுக்கும் இடையே பிரேசிலில் துப்பாக்கி சூடு.. ஆறு பேர் பலி...!
பிரேசில் நாட்டில் போலீசாருக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர.
பிரேசில் நாட்டின் மிக பெரிய நகரங்களில் ஒன்றான ரியோ டி ஜெனீரோவின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மங்கினோஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு கும்பல் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து காவல்துறையினர் படையுடன் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து, போலீசாருக்கும் துப்பாக்கி சூடு நடத்திய நபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இரு தரப்பினரும் துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டனர். இந்த கடுமையான தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இதனால், அந்த பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரியோ டி ஜெனீரோ நகர காவல்துறையினரின் தலைமையகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.