மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொலம்பியாவில் வானில் ஏற்பட்ட கரும்புகை.. எரிபொருள் சேமிப்பு கிடங்கு வெடித்து சிதறிய பரபரப்பு காட்சிகள்..!
தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாரன்குவிலாவில் உள்ள ஒரு பிரம்மாண்ட எரிபொருள் சேமிப்பு கிடங்கு கடந்த புதன்கிழமை தீ பற்றி பயங்கரமாக வெடித்து சிதறியது.
மேலும் இந்த கோர விபத்தில் ஒருவர் பலியானார். இந்நிலையில் எண்ணெய் கிடங்கில் இருந்து வானை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறி வருவதால் அந்தப் பகுதியைச் சுற்றிலும் சற்று அச்சம் நிலவியது.
இந்நிலையில் அப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருவதாகவும், மேலும் தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும் வரை அந்நகர துறைமுக செயல்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.