மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொடர்ந்து மூன்றாவது நாள் ஐசியூவில் சிகிச்சை.! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தற்போதைய நிலை என்ன.?
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களையும் தாக்கியது. கொரோனா உறுதியான பிறகு வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு வீடியோ கால் மூலம் அதிகாரிகள், அமைச்சர்களுடன் பேசி ஆட்சி நடத்திவந்தார் போரிஸ் ஜான்சன்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து லண்டன் St.தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மூச்சு விடுவதில் மேலும் சிரமம் ஏற்பட்டதை அடுத்து கடந்த திங்கள்கிழமை அவசர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார் இங்கிலாந்து பிரதமர்.
ICU வில் அனுமதிக்கப்பட்டாலும் சாதாரண ஆக்சிஜன்தான் பிரதமருக்கு செலுத்தப்படுவதாகவும், அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் (வெண்டிலேட்டர்) ஏதும் பொருத்தப்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், பிரதமரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், அவரால் இயற்கையாக சுவாசிக்க முடிவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், தொடரந்து மூன்றாவது நாளாக ஐசியூவில் இருக்கும் போரிஸ் ஜான்சனின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், பிரதமர் தானாகவே எழுந்து படுக்கையில் அமர்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. பிரதமர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட தகவல் இங்கிலாந்து மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தற்போது பிரதமரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுவருவது இங்கிலாந்து மக்களை சற்று நிம்மதியடையச்செய்துள்ளது. இருப்பினும், இங்கிலாந்து நாட்டில் கொரோனா காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதும், இறப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.