மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்த அதிர்ச்சி.. இளம் வயதுமருத்துவர் மாரடைப்பால் மரணம்.!
பிரேசில் நாட்டை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக இளம் வயதிலேயே மாரடைப்பால் மரணம் ஏற்படும் சம்பவங்கள் அடுத்தடுத்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக விளையாட்டு வீரர்கள், நாடக கலைஞர்கள் போன்ற இளம் வயதினர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர்.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. ஒரு சிலர் தற்போதைய உணவுப் பழக்கங்கள் காரணம் எனவும் கடின உடற்பயிற்சி செய்வது மற்றும் உடற்பயிற்சி செய்யாமலே இருப்பது எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரேசில் நாட்டை மருத்துவர் ருடால்ப் துவார்த் ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக இருந்து வந்தார். இவர் அங்கு பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்களை தனது சமூக வலைதளங்களை வெளியிட்டு பிரபலமாகினார். இந்த நிலையில் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.