தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வானமெங்கும் செந்நிறம்! காட்டுத் தீயில் தத்தளிக்கும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய நாட்டில் ஏற்பட்ட காட்டு தீயால் கோடிக்கணக்கான விலங்குகள் முதற்கொண்டு மனிதர்கள் வரை பலர் அழிந்துள்ள சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு ஏற்பட்ட காட்டு தீயில் இதுவரை 500 மில்லியனுக்கு மேலான விலங்குகள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அங்கு நிலைமையை சமாளிக்க 3,000 ராணுவத்தினா் இப்போது அழைக்கப்பட்டுள்ளனா். உலகெங்கிலும் இருந்து பல நூறு தன்னார்வலர்கள் மனிதனையும், விலங்குகளையும் காக்க வந்துக்கொண்டு இருக்கின்றனர்.
அங்கு ஏற்பட்ட காட்டு தீயால் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. பலத்த காற்றும், அதிக உஷ்ண நிலையும் காட்டுத் தீயின் வேகத்தை அதிகரித்துள்ளன.
கடந்த செப்டம்பா் மாதம் முதல் இந்தக் காட்டுத் தீ காரணமாக 23 போ் உயிரிழந்ததாகவும்1,500 வீடுகள் அழிந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கான உயிரினங்கள் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. அரிய வகை செடிகள் மற்றும் பூக்களுக்கு பெயர் பெற்ற ஆஸ்திரேலிய காடுகள் தீப்பிடித்துள்ளது. காட்டுத் தீ அபாயத்தில் வானமெங்கும் செந்நிறமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.