மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
133 பயணிகளுடன் தலைகீழாக விழுந்த விமானம்...! வெளியான இறுதிநிமிட திக் திக் சிசிடிவி காட்சி...
சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு நேற்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 133 பேர் பயணித்தனர். விமானம் குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைபகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மலைமீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பெரும் தீ விபத்து எற்பட்டது. விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து கடுமையான புகை எழுந்த நிலையில், தீயணைப்பு படையினர், ராணுவம், போலீசார் என பல்வேறு பிரிவினர் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர். . இந்நிலையில், மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 133 பேரும் உயிரிழந்து இருக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த விமானம் விழுந்து நொறுங்கிய சிசிடிவி காட்சிகளும், விமான விபத்துக்குள்ளான மலைப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டிருக்கும் காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.இதனிடையே, விபத்துக்கு முன்பாக விமானம் தலைகீழாக பாய்ந்து செல்லும் காட்சிகள் சீனாவில் உள்ள ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது.