"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
இறைத்தூதர் குறித்து அவதூறு கருத்து.. கல்லூரி மாணவருக்கு மரண தண்டனை விதிப்பு!
பாகிஸ்தானில் இறைத்தூதர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த கல்லூரி மாணவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்ற வருவது. இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இஸ்லாமிய மதக் கடவுள் மற்றும் அவர்களின் இறை தூதர் குறித்து அவதூறு கருத்துக்கள் தெரிவித்தாலோ, அவமதித்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் வாகனத்தை சேர்ந்த 22 வயதான கல்லூரி மாணவர் ஒருவர் இஸ்லாமிய மதக் கடவுளின் இறைத்தூதர் குறித்த அவதூறு கருத்துக்கள் இடம்பெற்ற புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவதூறு கருத்து தெரிவித்த 22 வயது கல்லூரி மாணவர் மற்றும் 17 வயது சிறுவன் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி 22 வயது கல்லூரி மாணவனுக்கு மரணம் தண்டனையும், 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.