மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து; 20 பேர் பரிதாப பலி.. கொலம்பியாவில் கண்ணீர் சோகம்.!
திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
தென்னமெரிக்காவில் உள்ள கொலம்பியாவின் துறைமுக நகரம் டுமாகோ. இந்நகரில் இருந்து அங்குள்ள காலி நகரை நோக்கி பேருந்து சென்றுகொண்டு இருந்தது.
அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், படுகாயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.