கொரோனா வைரஸ் பற்றிய மீம்ஸால் சர்ச்சையில் சிக்கிய நடிகர்! வைரலாகும் ட்விட்டர் பதிவு.



Coronavirus

சீனாவில் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் தோன்றிய கொரனோ வைரஸ் தற்போது அதி தீவிரமடைந்துள்ளது.இதன் பாதிப்பால் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 10, 000க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த கொடிய வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல நாடுகளிலும் பரவி வருகிறது. அதனை குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் பல நாட்டினரும் சீனாவில் உள்ள தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை தனி விமானம் மூலம் அழைத்து வருகிறது. 

Coronavirus

இந்நிலையில் கொரோனா வைரஸ் பற்றிய மீம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல இந்தி நடிகர் அர்ஷத் வார்சி. அதாவது அந்த மீம்சில் சீனர்களை போல் உள்ளவர்களை கொன்று விடுங்கள் என்பது போல் தோன்றுகிறது. 

அதனை பார்த்த பலரும் இது ஒரு இனவெறி தாக்குதல் பற்றி  இருப்பதாக கருத்து தெரிவித்து கண்டம் தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த மீம் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.