"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
விமானத்தில் சீன பெண்ணை சந்தித்ததாக கூறிய மனைவி.! பயத்தில் கணவன் செய்த செயல்! வெளியான பரபரப்பு சம்பவம்!
முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் என்னும் கொடிய வைரஸின் தாக்கம் இன்று உலகம் முழுவதும் சுமார் 70க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நோயில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் லிதுவேனியாவில் ஒரு பெண் ஒருவர் தனது கணவரிடம் தான் விமானத்தில் வரும் போது சீன பெண் ஒருவரை சந்தித்ததாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார் அந்த பெண்ணின் கணவர். அதனை அடுத்து அந்த பெண் குளிப்பதற்காக உள்ளே சென்ற போது அந்த பெண்ணின் கணவர் பாத்ரூம் கதவை தாப்பலிட்டுள்ளார்.
நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்காமல் இருந்துள்ளார் அவரது கணவர். நல்ல வேளை அந்த பெண் குளிக்க செல்லும் போது உடன் செல்போனை எடுத்து சென்றுள்ளார். அதன் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனை அடுத்து போலீசார் அந்த பெண் மீட்டு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வைரஸ் தாக்குதல் இல்லை என கூறியுள்ளனர். அதன் பின்னர் அந்த பெண்ணின் கணவரிடம் விசாரணை செய்த போது தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் தன்னை காத்து கொள்ள பயத்தில் அப்படி செய்ததாக கூறியுள்ளார்.
ஆனால் இது குறித்து அந்த பெண் தனது கணவர் மீது எந்த ஒரு புகாரும் கொடுக்காததால் அவரை போலீசார்அந்த நபரை கைது செய்யாமல் அப்படியே விட்டு சென்றுள்ளனர்.