மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா வைரஸ் தாக்குதல்! சாலைகளில் சரிந்துசாயும் மக்கள்! பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்!
தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை சீனாவில் 26 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 830க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
இந்த வைரஸ் எதன் மூலம் பரவுகிறது என ஆய்வுகள் மேற்கொண்டபோது வவ்வால் உண்ட பாம்புகளின் மூலமே பரவுகிறது என தகவல்கள் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் பெருமளவில் பரவாமல் இருக்க ஒரு கோடிக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட யுவான நகரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து யாரும் மற்ற நகரங்களுக்கோ, மற்ற நகரத்தில் இருந்து யுவானுக்கோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சீன மக்கள் நகரின் பல பகுதிகளிலும், மருத்துவமனைகளிலும் ஆங்காங்கே திடீரென சரிந்து விழுந்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பார்ப்போரை பதற வைத்துள்ளனர்.