மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தோண்ட தோண்ட பிணங்கள் ... எண்ணிக்கை 400-க்கு மேல் உயர்ந்தது... விசாரணை வளையத்தில் பாஸ்டர்.!
கென்யா நாட்டின் தேவாலயத்தை சுற்றியுள்ள வனப் பகுதியில் இருந்து மேலும் 12 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 403 ஐ கடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கென்யா நாட்டைச் சேர்ந்த பாதிரியாரான பால் மெக்கன்ஷி என்பவர் பட்டினி கிடந்தால் இறைவனைகாணலாம் எனக் கூறி மக்களிடம் பிரச்சாரம் செய்து இருக்கிறார். இதனை நம்பி ஏராளமான மக்கள் அவர் பணியாற்றி வந்த தேவாலயத்தில் கடவுளை காண்பதற்காக பட்டினி கிடந்துள்ளனர் . இதனைத் தொடர்ந்து பட்டினியால் உயிரிழந்தவர்களை ஷகாஹோலா வனப்பகுதியில் அடக்கம் செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த விவகாரம் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பாதிரியார் பால் மெக்கன்ஷி விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தை தொடர்ந்து வனப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இதுவரை 403 உடல்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன,
இவற்றில் சமீபமாக 12 உடல்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. மேலும் இந்த உடல்களில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் பெரும்பாலானோர் பட்டினியில் உயிரிழந்ததாகவும் சில குழந்தைகள் தாக்கி கொலை செய்யப்பட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது. பாதிரியார் மீது பயங்கரவாதம், இன அழிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.