மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உயிரிழந்ததாக பிணவறையில் வைக்கபட்ட தந்தையின் உடல்! அடம்பிடித்து சென்று பார்த்த மகளுக்கு காத்திருந்த பெரும் ஆச்சர்யம்!
கொலம்பியா சின்செலேஜோ பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ் முனோஸ் ரோமெரோ. இவருக்கு திடீரென உயர் ரத்தஅழுத்த பிரச்சினை ஏற்பட்ட நிலையில் அவரை குடும்பத்தார்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் 2 மணி நேரத்திற்குப் பிறகு அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் அவரது உடலை பிணவறையிலும் வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஜோஸ் உயிரிழந்ததை நம்பாத அவரது குடும்பத்தினர்கள், அவரை பார்க்க வேண்டுமென மருத்துவர்களிடம் சண்டைபோட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அனுமதி அளிக்காத நிலையிலும், அடம்பிடித்து ஜோஸின் மகள் பிணவறைக்குள் சென்று அவரது தந்தையை பார்த்துள்ளார். அங்கு ஜோஸ் மூச்சு விட்டுள்ளார்.
இந்த நிலையில் தனது தந்தை உயிருடன் இருப்பதை உணர்ந்த ஜோஸியின் மகள் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் அதை நம்பாத மருத்துவர்கள் மரணத்திற்கு பிறகு இதுபோன்ற எதிர்வினைகள் ஏற்படும் என கூறியுள்ளனர். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத ஜோஸின் குடும்பத்தார்கள் அவசர அவசரமாக அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் உயிருடன் இருந்த நபரை இறந்துவிட்டதாக கூறிய மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.