235 அடி உயரத்தில் ரோலர் கோஸ்டர் செயலிழந்து பரிதாபம்.. அந்தரத்தில் சிக்கித் தவித்த சுற்றுலா பயணிகள்..!



england-roller-goaster-stucked-235-feet

235 அடி உயரத்தில் ரோலர்கோஸ்டர் செயலிழந்ததால் சுற்றுலா பயணிகள் சிக்கித்தவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள Blackpool Pleasure Beach என்ற பகுதியில் கேளிக்கை பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அங்கு கடந்த 1994ஆம் ஆண்டு உலகத்தின் மிக உயரமான, செங்குத்தான ரோலர்கோஸ்டர் நிறுவப்பட்டது.

இந்த நிலையில், வார இறுதி நாட்களில் ஏராளமான மக்கள் கடற்கரைக்கு சென்று விளையாடுவதையும், ரோலர் கோஸ்டரில் உல்லாசமாக செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

England

அதுபோல சுற்றுலா பயணிகள் இன்று ரோலர்கோஸ்டரில் செல்லும்போது, திடீரென நடுவழியில் செயலிழந்துள்ளது. இதில் சுமார் 235 அடி உயரத்தில், 45 நிமிடங்களுக்கு பயணிகள் அந்தரத்தில் தொங்கியபடியே தவித்துள்ளனர். 

பின் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பல முயற்சிகளை செய்து அவர்கள் பயணிகளை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.