மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆதரவற்றோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்த குழந்தைகள்! வெளியான மனதை உருக்கும் துயர சம்பவம்!
ஹைட்டி நாட்டில் உள்ள குழந்தைகள் ஆதரவற்றோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைட்டி தலைநகரான போர்ட் ஓ பிரின்ஸ் அருகே பெர்மேட் நகரில் சர்ச் ஆப் பைபிள் என்ற ஆதரவற்றோர் இல்லம் அமைந்துள்ளது. அங்கு தாய் தந்தை இல்லாமல் ஏராளமான ஆதரவற்ற குழந்தைகள் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் அங்கு சமீபத்தில் இரவில் ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவற்றில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இல்லத்தில் உள்ள சிறுவர்கள் அனைவரும் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தியை பயன்படுத்தியுள்ளனர். அப்பொழுது எதிர்பாராதவிதமாக இல்லத்தில் தீ பற்ற ஆரம்பித்துள்ளது.
மேலும் இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டும் அவர்கள் இல்லத்திற்கு வந்து சேர ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகியுள்ளது. இதற்கிடையில் தீ ஆதரவற்றோர் இல்லம் முழுவதும் மளமளவென பரவியது. இந்நிலையில் தீயில் சிக்கி உள்ளேயிருந்த குழந்தைகள் பலரும் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போதுவரை உயிரிழந்தவர்களின் 15 பேரின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் 3 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.