மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூ.32 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் பிரேசில் முன்னாள் அதிபருக்கு 9 ஆண்டுகள் சிறை; நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!
பிரேசில் நாட்டில் முன்னாள் அதிபராக பணியாற்றி வந்தவர் பெர்னான்டோ. இவர் கடந்த 1990-92 காலங்கள் இடையே இரண்டு ஆண்டுகள் அதிபர் பதவியில் இருந்தார்.
அப்போது அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனத்தை தனியாருக்கு ஒப்பந்தம் செய்து கொடுக்க ரூபாய் 32 கோடி இலஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
ஜனநாயக முறையில் முறையாக அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட பெர்னான்டோ, இதுகுறித்து எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக பல ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊழல் செய்த பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்னால்டோக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.