உக்ரைனை கைப்பற்ற வந்தால் கொலைதான் - மிஸ் உக்ரைன் அழகி போர்க்கொடி..!
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து சென்று, 5 ஆவது நாள் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டில் உள்ள பல நகரங்களில் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இருதரப்பு சண்டையில் 4,300 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும், ரஷியாவின் தாக்குதலில் 14 குழந்தைகள் உட்பட 352 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷியப்படைகள் உக்ரைன் நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் அதிரடி தாக்குதலை நடத்தி வரும் நிலையில், போரில் உக்ரைன் சார்பாக பொதுமக்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு போர்பயிற்சிகளும் வழங்கப்பட்டு ஆயுதங்கள் கொடுக்கப்படுகிறது. கைகளில் மஞ்சள் நிற பட்டையுடன், இராணுவத்தினரை போல மக்கள் தங்களின் தாய்நாட்டை காக்க ஆயுதமேந்தி போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில், கடந்த 2005 ஆம் வருடம் மிஸ் உக்ரைன் பட்டம் வென்ற அழகி அனஸ்தீசியா லென்னா (வயது 31) நாட்டினை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த விசயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "படையெடுப்பு நோக்கத்துடன் உக்ரைன் எல்லையை கடக்கும் ஒவ்வொரு நபரும் கொல்லப்படுவீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.