மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னை ஜெயிலில் போட்டால் அவ்வுளவுதான்.. அந்த மாதிரி மாறிடுவேன் - இம்ரான் கான் எச்சரிக்கை.!
பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்ட வந்ததால், இம்ரான் கானின் பிரதமர் பதவி ஏப்ரல் 10 ம் தேதி பறிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பிரதமராக பொறுப்பேற்ற ஷபாஸ் ஷெரீப்புக்கு எதிராக இம்ரான் கான் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்.
மேலும், பாகிஸ்தானில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் குரல்கொடுத்து வருகிறார். கடந்த மாதம் 20-ம் தேதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெண் நீதிபதி, காவல் அதிகாரிகளை மிரட்டியதாக இம்ரான் கானுக்கு எதிராக புகாரும் வழக்குபதியப்பட்டுள்ளது.
இதன்பேரில், பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து இம்ரான் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில், "அரசு அதிகாரிகள் யாருக்கோ பயம் கொள்கிறார்கள். என்னை சிறையிலிட்டால் நான் கடும் ஆபத்தாகிவிடுவேன். ஒவ்வொரு கருத்திற்கும் ஒரு சூழல் உள்ளது.பாகிஸ்தான் நாளுக்கு நாள் கடுமையான பின்னடைவை சந்திக்கிறது. நாட்டின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனது பதவிக்காலத்தில் எதிரிகளை பலிகடா ஆக்கவில்லை" என்று தெரிவித்தார்.