மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலக அழகி போட்டி! நீச்சல் உடையில் செம ஸ்டைலாக நடந்து வந்த அழகிக்கு நேர்ந்த விபரீதம்! ஆனாலும் குவியும் வாழ்த்துகள்!
2019 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த மாடல் அழகிகளும் கலந்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் அழகி போட்டியில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் நேற்று நீச்சலுடையில் ரேம்ப் வாக் சுற்று நடைபெற்றது.அதில் பல்வேறு நாட்டு அழகிகளும், விதவிதமான நீச்சல் உடைகள் அணிந்து, தங்களுக்கே உரிய ஸ்டைலில் நடைபோட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த போட்டியில் கலந்து கொண்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அழகி மேவா குக்கே நீச்சல் உடையில் மிகவும் அழகாக, ஸ்டைலாக நடைபோட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அப்பொழுது மேடையில் சற்று ஈரபதமாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக வழுக்கி கீழே விழுந்துள்ளார்.
ஆனாலும் சற்றும் மனம் தளராத அவர் மிகவும் பொறுமையுடன் சிரித்துக்கொண்டே எழுந்து மீண்டும் புன்சிரிப்புடன் நடை போட்டார். இதனை கண்ட அரங்கில் இருந்த பார்வையாளர்கள் அவரை ஊக்குவிக்கும் விதமாக உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்நிலையில் இந்த வீடியோவை மேவா குக்கே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.