மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோமாக்கு சென்ற பாடகியும், நடிகையுமான பிரபலம்!! திரைத்துறை பரபரப்பு!!
அமெரிக்காவின் பிரபல பாடகியும், ஹாலிவுட் நடிகையுமான டோரி கெல்லி என்பவர் அவரது நண்பர்களுடன் உணவகம் ஒன்றில் உணவு அருந்தி கொண்டிருந்தார். அப்போது டோரி திடீரென சரிந்து விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட டோரி , சுயநினைவை இழந்துள்ளதாகவும், முக்கிய உறுப்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபெற்று இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, டோரியின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம், ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.