தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பாக்., வரலாற்று கரும்புள்ளி..! நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பதவியை இழந்த முதல் பிரதமராக இம்ரான் கான்.!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறி இம்ரான் கான் பதவியை இழந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி பிரதமர் பதவியை இழந்த முதல் நபராக இம்ரான் கான் இடம்பெற்றுள்ளார். இது அந்நாட்டின் வரலாற்றில் கரும்புள்ளியாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை நிறைவேற்ற பலகட்ட போராட்டம் நடைபெற்ற நிலையில், அதனை தவிர்த்து பதவியை தக்கவைக்க இம்ரான் கானும் தன்னால் ஆன முயற்சியை மேற்கொண்டு வந்தார். ஆனால், அது அனைத்தும் நேற்று இரவோடு பொய்த்துப்போனது. நேற்று நள்ளிரவுக்கு மேல் 342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், 174 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து அதனை நிறைவேற வழிவகை செய்தனர். இம்ரான் கானின் தெரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அதனை புறக்கணித்து இருந்தனர்.
இறுதியில் பெரும்பான்மை உறுதியாக தீர்மானமும் நிறைவேறியதால், இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னதாக, இம்ரான் கான் வெளிநாட்டு சக்தி (அமெரிக்கா) தன்னை பதவியில் இருந்து அகற்ற முயற்சித்து வருகிறது என பல பரபரப்பு பேட்டிகள் கொடுத்த நிலையில், அதனை அமெரிக்கா நிராகரித்தது. மக்கள் வீதிக்கு வந்து தனக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று இம்ரான் கான் தெரிவித்து இருந்த நிலையில், இறுதியில் இந்தியர்களை நான் மதிக்கிறேன் என்று பாகிஸ்தானில் உள்ள இந்து சிறுபான்மையினர் ஆதரவை பெற முயற்சித்தாலும் அது தேர்தலில் மட்டுமே எதிரொலிக்கும்.
தற்போதைய நிலையில், நாளை (திங்கட்கிழமை) புதிய பிரதமர் தேர்வு செய்யும் பணிகள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இம்ரான் கான், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து அரசியலில் நாட்டினை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்வோம் என முழக்கத்துடன் களமிறங்கினார். ஆனால், இறுதியில் அவரும் 5 வருடங்கள் கூட பதவியை நிலைக்க வைக்க முடியாத பாக். பிரதமரின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார்.