மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுற்றுலா பயணத்தில் சோகம்.. பேருந்து விபத்தில் சிக்கி 13 பேர் சம்பவ இடத்திலே பலி.!
இன்பச்சுற்றுலா சென்ற இடத்தில் பேருந்து விபத்திற்குள்ளான நிலையில், 13 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தோனேஷிய நாட்டில் உள்ள யோகர்த்தா மாகாணம், பந்தூல் மாவட்டத்தில் சுற்றுலா பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டு இருந்தது. பேருந்தில், 40 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இவர் ஜாவா தீவில் இருந்து பரங்கிரிட்ஸ் பகுதிக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில், 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
மேலும், 8 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.