ஈரான் நாட்டில் பயங்கரம்... காவல்துறையின் துப்பாக்கிச்சூடு.. பலியான 9 வயது சிறுவன்.!



iran-a-nice-year-old-kid-was-killed-in-a-police-shoot-o

மத்திய கிழக்கு நாடான ஈரானில்  ஒன்பது வயது சிறுவன் ஒருவன் போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுவனின் தந்தை பரபரப்பான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

ஈரானைச் சார்ந்த ஒருவர் மீது கார் திருட்டு  மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்ற பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஈரான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் வசித்து வந்த அந்த நபர்  காரை திருட முயற்சித்த போது  அவரை தடுப்பதற்காக காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அப்போது போலீசார் சுட்ட குண்டு ஒன்று எதிர்பாராத விதமாக அவரது ஒன்பது வயது மகன் முர்த்தாசா மீது பாய்ந்ததில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

worldnews

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காவல் துறை துப்பாக்கியால் சுடுவதற்கு முன் பலமுறை எச்சரித்தும் சிறுவனின் தந்தை அதனை கண்டு கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அந்த சிறுவனின் தந்தை  காவல்துறை எந்தவித முன்னெச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிடவில்லை என குற்றம்  சாட்டியிருக்கிறார்.

இந்த சம்பவம் உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பல்வேறு பகுதியைச் சார்ந்த மக்களும் சமூக வலைதளங்களில் மூலமாக  சுட்டு கொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.