தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#BigBreaking: இந்தியாவுக்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிப்பு: கப்பல் பணியாளர்கள் நிலை என்ன?.. மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்.!
இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போர் அக்.07ல் தொடங்கி, இன்று வரை நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தரப்பில் ஹமாஸின் தாக்குதலில் 1400 பேர் பலியானாலும், இஸ்ரேலின் பதிலடி தாக்குதலில் ஹமாஸின் பாலஸ்தீனிய நகரம் பேரழிவை சந்தித்துள்ளது. அங்குள்ள அப்பாவி பொதுமக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடியாக ஆயுதங்களை வழங்கி உதவி செய்து வருகிறது. ஹமாஸுக்கு மத்திய கிழக்கு நாடுகள் உதவுகின்றன. பயங்கரவாதத்தை ஹமாஸ் கையில் எடுத்த காரணத்தால், அவர்கள் ஆதரவு நாடுகளை தவிர்த்து, பிற நாடுகளின் உதவிகள் கிடைக்கவில்லை. ரஷியா நடுநிலை வகிக்கிறது.
இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவை தெரிவித்தாலும், பாலஸ்தீனிய நாட்டில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருத்துவ பொருட்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது. இன்றுகூட இந்திய விமானப்படை விமானம், பாலஸ்தீனிய மக்களுக்கான அடிப்படை உதவிப்பொருட்களை எடுத்துக்கொண்டு இஸ்ரேல் - காசா எல்லையில் உள்ள எகிப்து நகரின் விமான நிலையம் நோக்கி பறந்தது.
இந்நிலையில், மத்தய கிழக்கு நாட்டில் மிகப்பெரிய பதற்ற சூழலை ஏற்படுத்தும் வகையில், ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டுள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் உள்ள தெற்கு சிவப்பு கடலில் (South Red Sea, Yemen) பயணித்த கப்பல் ஒன்றை சிறைபிடித்துள்ளனர்.
இந்த கப்பல் துருக்கியில் இருந்து புறப்பட்டு இந்தியா நோக்கி பயணித்த சரக்கு கப்பல் என முதற்கட்ட தகவலை இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த கப்பலில் இஸ்ரேலியர்கள் இல்லாத நிலையில், பல நாடுகளை சேர்ந்த கப்பல் பணியாளர்கள் வேலை பார்த்து வரும் கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சிறைபிடித்து கடத்தி இருக்கின்றனர்.
இதனால் அவர்களின் நிலை என்ன என தெரியவில்லை.