நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி, பலர் மாயம்! மீட்பு பணிகள் தீவிரம்!



Landslide in Vietnam 13 members died

வியட்நாமில் கடந்த சில வாரமாக கடுமையான கடும் மழை பெய்து வருகிறது. இதன் 
காரணமாக  ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர், மேலும் பலர் மாயமாகியுள்ளனர் என கூறப்படுகிறது.

இதுகுறித்து வியட்நாம் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது, வியட்நாமில்  பலத்த மழை காரணமாகப் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் ரிசார்ட் நகரமான நா தாராங் நகரில் உள்ள கிராமங்களில் நிலச்சரிவுக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர் என்றும் மேலும் பலர் மாயமாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

earth quake

மிகவும் ஆபத்தான பகுதிகளில் நிலச்சரிவில் மாட்டிக்கொண்ட மக்களை காப்பாற்ற 600க்கும் மேற்பட்ட  ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு அனைவரும் காப்பாற்றப்படுவார்கள் என்றும், மக்கள் யாரும் அச்சம் கொள்ளவேண்டாம் என்றும் வியட்னாம் அரசு தெரிவித்துள்ளது.