பெட்ரூமில் கேட்ட திடீர் சத்தம்.. ஓடிச்சென்று பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி.. ஒரு குடும்பமே தவிக்கும் சம்பவம்



Laptop burned in bed room family lost everything

படுக்கையறையில் வைத்திருந்த லாப்டாப் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் ஒரு குடும்பமே வீடு வாசலை இழந்த சம்பவம் நடந்துள்ளது.

பிரிட்டனில் லிவர்பூல் பகுதியில் ரெபேக்கா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் ரெபேக்காவின் அறையில் இருந்து திடீரென சத்தம் கேட்டுள்ளது. அங்கு ஓடிச்சென்ற ரெபேக்காவின் தாயார் ரெபேக்காவின் கட்டிலில் இருந்த லாப்டாப் வெடித்து அறைமுழுவதும் தீ பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே வீட்டில் இருந்த வாளிகளில் தண்ணீரை எடுத்து தீயை அணைப்பதற்குள் நிலைமை கைமீறிப்போய்விட்டது. ரெபேக்காவின் வீடும், வீட்டில் இருந்த பல்வேறு பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

Laptop burst

இந்த விபத்து நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் ரெபேக்காவிற்கு மூளையில் ஏற்பட்ட புற்று நோயை அகற்ற அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதற்காக அவரது குடும்பத்தினர் பெரும் தொகையை செலவு செய்துள்ளனர். தற்போது அவர்கள் தங்கியிருந்த வீடும் தீயில் நாசமானதால் தற்போது அவர்கள் பொதுமக்களின் உதவியை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ரெபேக்காவின் குடும்பத்தினர் அந்த வீட்டை மீண்டும் சரிசெய்து அந்த வீட்டில் குடியேற குறைந்தது 9 மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. பெட்டில் இருந்த லாப்டாப் சார்ஜ் ஏறிய நிலையில் இருந்திருக்கலாம் எனவும், லாப்டாப் அதிக சூடாகி வெடித்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதுபோன்று லாப்டாப், செல்போன் ஆகியவரை நெருப்பு பரவும் இடங்களுக்கு அருகில் வைத்து நீண்ட நேரம் சார்ஜ் போடுவது, இரவில் சார்ஜ் போட்டுவிட்டு உறங்குவது போன்றவை மிகவும் ஆபத்தான ஒன்று. இதுபோன்ற செயல்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.