மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
550 கும் மேற்பட்ட இளம் பெண்கள்! 53 வயது நபர் செய்த காரியம்! அதிர்ச்சியான போலீசார்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவர் பெண்களுக்கே தெரியாமல் சுமார் 550 க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க இடங்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவை சேர்ந்த அந்த நபர் ஸ்பெயின் தலை நகரில் வசித்து வந்துள்ளார். இவர் தனது பைக்குள் செல்போனை மறைத்து வைத்துக்கொண்டு பொது இடங்களுக்கு செல்வதும் அங்கே வரும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் ஆபாச கோணங்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
முக்கியமாக மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் வணிக வளாகங்களுக்கு கவர்ச்சியான உடையில் வரும் பெண்களே இவரின் முக்கியமான குறி. அந்த வகையில் இதுவரை சுமார் 550 க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க இடங்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார்.
அதில் ஒரு சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இதுவரை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். குறிப்பிட்ட நபரின் நடவடிக்கை மீது ஒரு சிலருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கடந்த சில தினங்களாக கண்காணித்ததில் அவர் செய்யும் மோசமான வேலையினை போலீசார் உறுதி செய்தனர். மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.