மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராட்சச நாகப்பாம்பிடம் அசால்டாக விளையாடிய நபர்! இறுதியில் தலையை வெட்டி எடுத்த கொடூரம்! வைரலாகும் பகீர் வீடியோ!
இந்தோனேஷியா West Kalimantan பகுதியில் வசித்து வந்தவர் சேர்ந்தவர் நொர்ஜனி. இவர் விலங்குகளை வைத்து வித்தை காட்டுபவர். இந்நிலையில் இவர் சமீபத்தில் 16.5 அடி நீளம் கொண்ட ராஜநாகம் ஒன்றை தனது கையில் பிடித்து அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் முன் வித்தை காட்டியுள்ளார். மேலும் அந்த பாம்பு எவ்வளவோ முயன்றும் அந்த நபர் பாம்பை விடாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பசியில் கடும்ஆத்திரத்தில் இருந்த பாம்பு, அந்த நபரின் கையில் கடித்துள்ளது. அதனை பொருட்படுத்தாத அவர் தொடர்ந்து அந்த பாம்பை வைத்து வித்தை காட்டிவந்துள்ளார். இந்நிலையில் அந்த நாக பாம்பு மீண்டும் அவரை கடித்துள்ளது. அதனைதொடர்ந்து அன்று மாலையே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது.
உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பாம்பி விஷம் உடல் முழுவதும் பரவிவிட்டது, இனி காப்பாற்ற முடியாது என கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் ஆத்திரமடைந்தஅந்த பாம்பின் தலையை துண்டாக வெட்டி கொன்று ஆத்திரத்தை தீர்த்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நொர்ஜனி பாம்பை வைத்து வித்தை காட்டிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.