மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
14 வயது சிறுமியை உயிருடன் எரித்துகொன்ற நபர்! இதற்காகவா.! விசாரணையில் வெளிவந்த பகீர் காரணம்!
பாகிஸ்தானில் 14 வயது சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் கேட்ட நிலையில், அவரது தந்தை அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் அந்த நபர், பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் வசித்து வந்தவர் முகமது யூசுப். இவரது மகள் சாதியா. 14 வயது நிறைந்த அவரை முகமது யூசுப்பின் சகோதரரான முகமது யாகூப் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு முகமது யூசுப் கடந்த இரு மாதங்களுக்கு முன்பே சாதியாவை வேறொரு நபருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக வாக்குக் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த யாகூப், தனது மகனுக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என எண்ணி அவரது வீட்டருகே காத்திருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சாதியா மட்டும் வீட்டில் இருப்பதை அறிந்த அவர் வீட்டிற்குள் சென்று பெட்ரோலை ஊற்றி அவரை உயிருடன் கொளுத்தியுள்ளார். இந்நிலையில் எப்படியோ வீட்டிலிருந்து வெளியேறிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆனால் சாதியா குடும்பத்தினர் இந்த விஷயத்தை மறைக்க முயற்சி செய்துள்ளனர். மேலும் கேஸ் சிலிண்டர் வெடித்துதான் தனது மகள் இறந்ததாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் விசாரணையில் குடும்பத்தினர் அனைவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த நிலையில், உண்மையைக் கண்டறிந்து போலீசார் முகமது யாகூப்பை கைது செய்தனர். மேலும் அவரும் நடந்த உண்மை அனைத்தையும் ஒப்புக் கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு எதிராக கண்டங்களும் கிளம்பி வருகிறது.