மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் மனைவிக்கே கிரீடம் இல்லையா?.. மிஸ் பிரேசில் அழகி போட்டியில் கணவரின் பகீர் செயல்.!
பிரேசில் நாட்டில் நடைபெற்ற மிஸ் பிரேசில் அழகி போட்டியில் இறுதிகட்ட போட்டி நடைபெற்ற சமயத்தில் நதாலி பெக்கர் மற்றும் எமானுவெலி பெலினி ஆகியோர் இறுதிப்போட்டியில் நுழையும் நபர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து வெற்றியாளர் அறிவிக்க இருவரும் மேடையில் ஏற்றப்பட்ட நிலையில், மகுடமும் சூட்டப்பட்டது. அந்த சமயத்தில் இரண்டாம் இடம் பிடித்த நதாலியின் கணவர் மேடைக்கு வந்து பெலினிக்கு சூட்டப்பட்ட கிரீடத்தை தரையில் வீசி உடைத்தார்.
கீழே விழுந்த கிரீடத்தை எடுத்து மீண்டும் அடித்ததில் கிரீடம் துண்டு துண்டாக உடைந்துபோனது. இதனை கண்ட நடுவர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், நடுவர்கள் சரியான தீர்ப்பை வழங்கவில்லை.
ஆத்திரத்தில் நான் இவ்வாறு செய்தேன். திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று கணவர் ஆவேசமாக முழங்கியுள்ளார்.