மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இராணுவ பாதுகாப்பை தகர்க்க கிளர்ச்சியாளர்கள் குழு வெறிச்செயல்.. 22 பேரை சுட்டு கொன்று பயங்கரம்.. மியான்மரில் அதிர்ச்சி.!
மியான்மர் நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு முதல் இராணுவத்தின் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு இராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கும் மக்கள் விரட்டி அடிக்கப்படுகின்றனர், சில நேரங்களில் துப்பாக்கிசூடு சம்பவங்களும் நடைபெறுகின்றன.
ஆனால், மியான்மர் இராணுவம் ஆட்சியை பிடித்தபோது, நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலைகள் சரியாக இல்லை. கிளர்ச்சியாளர்கள் குழுவினால் நாட்டிற்கு பேராபத்து காத்துக்கொண்டுள்ளது. அதனாலேயே அதிகாரத்தை கைப்பற்றுகிறோம் என தெரிவித்து இருந்தது.
அவர்கள் ஆட்சியை கைப்பற்றியதும் அரசியலமைப்பில் மக்கள் செல்வாக்கு பெற்ற பல தலைவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர், சிலர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். இராணுவத்தின் உத்தரவுகளை மீறிய பலரும் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், அங்குள்ள மடாலயத்தில் 22 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள நாணியன்ட் கிராமத்தினருக்கு மியான்மர் இராணுவம் பாதுகாப்பு அளிக்க சென்றுள்ளது. அந்த சமயம் கிளர்ச்சியாளர்கள் குழு திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 22 அப்பாவிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.