மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒற்றை வாழைப்பழத்திற்காக நடுரோட்டில் சண்டையிட்டு கொண்ட நூற்று கணக்கான குரங்குகள்! வைரலாகும் வீடியோ.
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலமான லோப்புரி நகரில் ஆயிரக்கணக்கான குரங்குகள் வசித்து வருகின்றன. அந்த இடத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவு அளிப்பர். ஆனால் தற்போது கொரோனா நோயின் அச்சத்தால் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் சுற்றுலா பயணி ஒருவர் குரங்கு ஒன்றிற்கு வாழைப்பழம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த ஒற்றை வாழைப்பழத்திற்கு நூற்றுக்கணக்கான குரங்குகள் சண்டையிட்டு கொள்கின்றன. தற்போது அந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.