மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன கண்றாவி டிரெஸ் இது?.. இதுக்கு உள்ளாடையோட திரியலாமே.. காண்போரை பதைபதைக்க வைத்த உடை.!
தற்போதைய காலகட்டத்தில் மற்றதுறைகள் வளர்வது போலவே நவீனரீதியாக ஃபேஷன் துறையும் வளர்ந்து வருகிறது. இதனால் முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் புனரமைக்கப்பட்டு மீண்டும் ட்ரெண்டான உடைகள் என்று சந்தையில் விற்கப்பட்டு வருகிறது.
இதற்கு மக்கள் இடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது மட்டுமின்றி வீட்டில் இருந்தபடியே மிந்த்ரா, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆப்களில் இருந்து ஏராளமானோர் உடைகளை ட்ரெண்டிங்காக ஆர்டர் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது ஷீன் என்ற பிரபல இ-காமர்ஸ் தளத்தில் 2000sகளின் முன்னோடியான மேற்கத்திய ஆடை வடிவமைப்பில் பிரபலங்கள் மற்றும் மாடலிங் அழகிகளின் பயன்பாட்டில் இருந்த "Crotchless chaps" என்ற உடையை மீண்டும் சந்தைப்படுத்தியிருக்கிறது.
இந்த உடையானது கட்- அவுட் முறையில் உள்ளாடைகள் தெரியும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆரம்ப கட்டத்திலேயே பலவித எதிர்ப்புகளை இந்த உடை பெற்றிருந்தது. ஏனெனில் Crotchless chaps பொதுவெளியில் அணியக்கூடிய வகையில் இருக்காததே அதற்கு காரணமாகும்.
மேலும் 2000sகளில் அமெரிக்க நடிகையும், பாடகையான கிறிஸ்டினா ஒரு மியூசிக் வீடியோவில் இந்த உடையை அணிந்திருந்தது காண்போரை மிகவும் முகம் சுழிக்க செய்திருந்த நிலையில், தற்போது ஷீன் அந்த வகை ஃபேஷன் ஆடையை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறார்.
இது தொடர்பான விளம்பரத்தை கண்ட நெட்டிசன்கள் வழக்கத்திற்கு மாறான உடைய பொதுவெளியில் எப்படி அணிய முடியும்? என்று கேள்வி எழுப்பியதுடன், இவ்வித ஆடைகளை எதற்காக சந்தைக்கு கொண்டு வர நினைத்தார்? இதெல்லாம் ஒரு ஆடையா? என்று கூறி வருகின்றனர்.
இருந்த போதிலும் சிலர் 1900 ரூபாய் மதிப்புள்ள இந்த Crotchless chaps ஆடைக்கு ஷீன் தளத்தில் 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்திருக்கின்றனர். இதனால் இந்த சர்ச்சைக்குள்ளான ஆடைக்கு கலவையான கமெண்ட்கள் வந்துள்ளன.